நர்சு வேலை வாங்கி தருவதாக பண மோசடி; 3 அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்கு

0 471
Stalin trichy visit

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கீழ குமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்பிரசாத். இவரது மனைவி மார்க்ரெட் ஜெனிபர்(வயது 34). இவர் நர்சிங் படித்து உள்ளார்.

மேலும் இந்நிலையில் கிருஷ்ணசமுத்திரம் அ.தி.மு.க. கிளைச் செயலாளர் ஓசூர் அருகே உள்ள தேனீர் பட்டியை சேர்ந்த மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் வீரமலை மற்றும் அ.தி.மு.க. ஒன்றிய மாணவரணி துணை செயலாளர் சுப்பிரமணி ஆகிய 3 பேரும் சேர்ந்து ஜெனிபருக்கு அரசு நர்சிங் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சத்தை வாங்கிக்கொண்டு வேலை வாங்கித்தராமல் பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வருவதாக கூறப்பட்டது.

மேலும் இது சம்பந்தமாக ஜெனிபர் துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.