அரசு மானியம் வழங்க தடையாக உள்ள தனியார் பள்ளி ஒழுங்காற்று விதிகளில் புதியதாக சேர்க்கப்பட்ட விதியை நீக்க வலியுறுத்தல்
தமிழ்நாடு தமிழ்வழி பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதற்கு தலைவர் முஸ்தபா கமால் தலைமை தாங்கினார்.
மாநில பொதுச்செயலாளர் செபாஸ்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 1991-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட மற்றும் தரம் உயர்த்தப்பட்ட தமிழ்வழிப்பள்ளிகளுக்கு அரசு மானியம் வழங்க தடையாக உள்ள தனியார் பள்ளி ஒழுங்காற்று விதிகளில் புதியதாக சேர்க்கப்பட்ட விதியை நீக்கிட வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலரின் ஆளுகைக்குட்பட்ட தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் செயலர்களின் கூட்டம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை பரிசீலனை நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.