வயிற்று வலியை தாங்க முடியாமல் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

0 413
Stalin trichy visit

திருச்சி ஏர்போர்ட் குமரன் தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் ஹரிணி(வயது 14). இவர் ஏர்போர்ட் பகுதியில் உள்ள அன்னை ஆசிரமம் பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இதற்காக மருந்தகங்களில் மருந்து வாங்கி உட்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் வயிற்றுவலி அதிகமானதை தொடர்ந்து வீட்டில் படுக்கை அறையில் இருந்த பேனில், சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீண்ட நேரமாக ஹரிணியை காணாததால் வீட்டில் உள்ள படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து ஏர்போர்ட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற ஏர்போர்ட் போலீசார் ஹரிணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.