கல்லூரி மாணவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 4 பேர் சிறையில் அடைப்பு

0 318
Stalin trichy visit

திருச்சி ஈ.பி ரோடு சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழன்(வயது 19). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று காந்தி மார்க்கெட் அருகே இரவு நேரத்தில் நடத்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் தாரநல்லூர் பகுதியை சேர்ந்த வீரமணி(20), ஹரிகரசுதன்(21), கோகுல்நாத்(22), மேலசிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் தயாநிதி(20) ஆகியோர் தமிழனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி சரமாரியாக அடித்துள்ளனர்.

பின்னர் அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பறித்து சென்றனர். இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுகுமாரன் வழக்குப்பதிவு செய்து வீரமணி, ஹரிகரசுதன், கோகுல்நாத், தயாநிதி ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.