விதை நேர்த்தி விழிப்புணர்வு முகாம்
திருச்சி வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மையம் சார்பில் விதை நேர்த்தி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் திருச்சி எப்.கீழையூர், புதுக்கோட்டை குளவாய்பட்டி, தஞ்சை சோழகம்பட்டி ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் விதை நேர்த்தி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் விதை நேர்த்தியின் அவசியத்தையும் அதன் மூலம் நோய் கட்டுப்படுத்துதல் முறைகளையும் செயல் முறை விளக்கம் வாயிலாக மையத்தின் பயிர் பாதுகாப்பு அதிகாரிகள் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இந்த முகாம் மூலம் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் அடைந்தனர்.