நோய் பாதிப்பால் மன உளைச்சலில் இருந்த பெண் தீக்குளித்து தற்கொலை

0 444
Stalin trichy visit

திருச்சி மதுரை ரோடு வள்ளுவர் நகரை சேர்ந்தவர் அப்துல்கலாம் மனைவி பரக்கத் நிஷா(வயது 35). இவர்களுக்கு திருமணமாகி 16 வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை குழந்தைகள் இல்லை. இந்நிலையில் இவருக்கு ஒரு சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டு ஏற்கனவே அகற்றப்படதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது வரை அவர் திருச்சியில் உள்ள பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினமும் அதே போல சிகிச்சைக்கு சென்று வந்துள்ளார்.

இதில் நோய் பாதிப்பு குறையாததால், மன உளைச்சலில் இருந்துள்ளார். இதற்கிடையே நேற்று காலை தனது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றபோது வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.