மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் இந்தியா விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தனர் அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார்(வயது 45) என்பவர் மீது ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் செந்தில்குமார் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் திருச்சிக்கு வந்து செந்தில் குமாரை அழைத்து சென்றனர்.