லால்குடி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. லோகாம்பாள் காலமானார்

0 365
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. லோகாம்பாள்(வயது 69). இவர் 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் லால்குடி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக லோகாம்பாள் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான லால்குடி அருகே உள்ள குமுளூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது நல்லடக்கம் இன்று மாலை நடக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.