திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய், சிங்கப்பூர், மஸ்கட், ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
அந்த வகையில் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது அரியலூரை சேர்ந்த மணிகண்டன்(வயது 38) என்ற பயணி தனது உடலில் மறைத்து எடுத்து வந்த 869 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர் இதன் மதிப்பு ரூ.42.30 லட்சம் என தெரிய வருகிறது.
இதே விமானத்தில் பயணம் செய்த சிவகங்கையை சேர்ந்த மணிகண்டன் 45 என்ற பயணி தனது உடலில் மறைத்து எடுத்துவந்த 709 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.34.50 லட்சம் என தெரிய வருகிறது. ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்தில் ரூ.76.80 லட்சம் மதிப்பிலான 1580 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.