சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி முதியவர் பலி

0 358
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை பகுதி ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 68). இவர் நேற்று திருச்சி நெ1டோல்கேட் அடுத்து மாருதி நகர் பேருந்து நிலையம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது திருச்சி நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக ராதாகிருஷ்ணன் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராதாகிருஷ்ணனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த சென்னை சாலிகிராமம் வேலாயுதம் காலனி பகுதியை சேர்ந்த ராகுல் (வயது30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.