கவாத்து செய்வதன் மூலம் மழை- புயலில் இருந்து மரங்களை பாதுகாக்கலாம்

0 340
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ள நிலையில் அறுவடைக்கு தயாராக உள்ள தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்த தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு பயிர்களை பாதுகாக்க வேண்டும். மா, கொய்யா மற்றும் இதர பணப் பயிர்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றி கவாத்து செய்வதன் மூலம் மரத்தின் சுமையை குறைத்து மழை மற்றும் புயல் காற்றில் இருந்து பாதுகாக்கலாம்.

மழை நீர் தேங்க வாய்ப்புள்ள இடங்களில் ஆங்காங்கே வடிகால் வசதி செய்து மழைநீர் வெளியேறிய பின்னர் அடி உரம் இட்டு மரத்தை சுற்றி மண் அணைத்தல் வேண்டும். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க பசுமை குடிலை சுற்றி நீர் வேலி அமைக்க வேண்டும். இதனை அனைத்து விவசாயிகள் கடைபிடித்து பயன் பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் சிவராசு அறிவுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.