மருமகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த மாமனார், மாமியார் மீது வழக்கு
திருச்சி மாவட்டம், கள்ளக்காம்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரும் திவ்யா என்பவரும் கடந்த 2017ம் ஆண்டு காதல் திருமணம் செய்துள்ளனர். அதன் பின்னர் திருப்பூரில் வசித்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கணவனை பார்க்க சென்ற திவ்யாவை அவரின் மாமனார் கோவிந்தன், மாமியார் சின்னம்மாள் உள்ளிட்ட 4 பேர் ஜாதியை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளாதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திவ்யா துவரங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மாமனார்- மாமியார் உள்ளிட்ட 4 பேர் மீது வன்கொடுமை (எஸ்சி/எஸ்டி) தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.