சாலையோரம் கிடந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த குடும்பத்தினருக்கு போலீசார் பாராட்டு

0 323
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த குமரம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜிவ்காந்தி(வயது 39). வேன் மூலம் பூண்டு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி புவனேஷ்வரி, 8 வயது மகள் தாரணி. 3 பேரும் மணப்பாறையில் உள்ள திருச்சி சாலையில் ஒரு டீக்கடையில் டீ குடித்து விட்டு அவரது வேன் நிற்கும் பகுதிக்கு செல்ல தயாரான போது சாலையோரத்தில் ஒரு சிறிய கைப்பை கிடந்துள்ளது. இதைப்பார்த்த சிறுமி உடனே சென்று அதை எடுத்து வந்து தந்தை ராஜிவ்காந்தியிடம் கொடுத்துள்ளார். அதை ராஜிவ்காந்தி திறந்து பார்த்த போது பணம் இருப்பது கண்டு உடனே குடும்பத்தினருடன் மணப்பாறை போலீஸ் நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் கீழே கிடந்த பையை ஒப்படைத்தார். மேலும் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை இன்ஸ்பெக்டர் கருணாகரனும் வந்து பார்த்த போது பையில் 50 ஆயிரம் ரொக்கப்பணம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேர்மையாக செயல்பட்ட அந்த குடும்பத்தினரை கௌரவித்து நன்றி தெரிவிக்கும் வகையில் பொன்னாடை அணிவித்தார். இதுமட்டுமின்றி அந்த சிறுமிக்கு இனிப்பு வழங்கி பாராட்டினார். இதே போல் ஏற்கனவே 50 ஆயிரம் பணம் தொலைந்து விட்டதாக நாகமங்களத்தைச் சேர்ந்த குஞ்சுபிள்ளை (வயது 60) என்பவர் புகார் அளித்திருந்தார். அதன்படி அந்தப்பணத்தை அவரிடம் ஒப்படைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.