தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு கோட்டம் வாரியாக பரிசு
திருச்சி மாநகராட்சி பகுதியில் 6-வது கொரோனா தடுப்பூசி முகாம் கடந்த 23-ந் தேதி நடைபெற்றது. இந்த முகாமில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கோட்டம் வாரியாக முதல் பரிசாக 4 பேருக்கு பிரிட்ஜ், 2-ம் பரிசாக 4 பேருக்கு வாஷிங்மெஷின், 3 பரிசாக 8 பேருக்கு கிரைண்டர் மற்றும் 40 பேருக்கு சைக்கிள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்பேரில் கடந்த 23-ந் தேதி நடந்த மெகா தடுப்பூசி முகாமில் மாநகராட்சி பகுதியில் 27 ஆயிரத்து 532 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த நபர்களுக்கு கோட்டம் வாரியாக குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 56 நபர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் மநாகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான் கலந்து கொண்டு, தடுப்பூசி செலுத்தி தேர்வானவர்களுக்கு பிரிட்ஜ், வாஷிங்மெஷின், கிரைண்டர் உள்ளிட்ட பரிசுகளை வழங்கினார். அப்போது செயற்பொறியாளர் சிவபாதம், உதவி ஆணையர்கள் சண்முகம், தயாநிதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.