திருச்சி மாவட்டம், முசிறி அருகே அரசு கலைக்கல்லூரி தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(45). தொழிலாளியான இவர் தனது மொபட்டில் முசிறிக்கு வந்து கடைவீதியில் மளிகை சாமான்கள் வாங்கி விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக முசிறி – தண்டலைப்புத்தூர் செல்லும் சாலையில் சென்றுள்ளார். அப்போது தனியார் தார் பிளான்ட் அருகே எதிரே வந்த சரக்கு ஆட்டோ மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கோவிந்தராஜ் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். சம்பவம் குறித்து முசிறி சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து சரக்கு ஆட்டோ டிரைவர் சிங்காரவேலன் (22) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.