கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
திருச்சி சிறுகமணி மெயின் ரோட்டை சேர்ந்தவர் கலியபெருமாள்(வயது 55). கூலித்தொழிலாளியான இவர் ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள தோட்டத்தில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் தோட்டத்தில் உள்ள மாமரத்தில் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.