தனியார் வேலைவாய்ப்பு முகாம்; நாளை மறுநாள் நடக்கிறது 

0 766
Stalin trichy visit

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (12ந் தேதி) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. திருச்சி மாவட்ட தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சோ்ந்த வேலை வழங்குவோர் நேரடியாக வந்து தங்களுக்குத் தேவையான ஆள்களைத் தோ்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு, பிளஸ்2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ கல்வித்தகுதி உடையவா்கள் பங்கேற்கலாம். கல்விச்சான்று, மதிப்பெண் சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 2 புகைப்படங்களுடன் வர வேண்டும்.

இந்த முகாம் மூலம் வேலை பெறுவோரின் வேலைவாய்ப்பு பதிவு ரத்தாகாது. அப்படியே தொடரும். முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் தங்களது தேவை குறித்த விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பகத்துக்கு நேரிலோ, தபால் மூலமோ தெரிவிக்கலாம். இப் பணி முற்றிலும் இலவசமானது என மாவட்ட வேலைவாய்ப்பகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.