திருச்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்!

0 475
Stalin trichy visit

திருச்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

பருவ மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அரசு சார்பாகவும், கட்சி சார்பாகவும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு .க ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் பெண்கள் பாதுகாப்பு நலச் சங்கம் மாநில தலைவர் மதனா தலைமையில் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு புடவை, வேஷ்டி, குடை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் திமுக மாவட்ட தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் எ.கே.அருண், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சூர்யா, திருவரங்கம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் இலட்சுமணன், திருச்சி மேற்கு தொகுதி ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

Leave A Reply

Your email address will not be published.