ரெம்டெசிவர் மருந்து கிடைக்காத ஏமாற்றத்தால் சாலையில் உருண்டு புரண்டு அழுத பெண்கள்
ரெம்டெசிவர் மருந்து கிடைக்காத ஏமாற்றத்தால் சாலையில் உருண்டு புரண்டு அழுத பெண்கள்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவர் மருந்து திருச்சி அரசு பிசியோதெரபி கல்லூரியில் கடந்த 8ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வந்ததுதனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உறவினர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மருந்துகளை வாங்கி வந்தனர்.நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மருந்து விற்பனை செய்யப்படாத நிலையில் இன்று மீண்டும் மருந்துகள் வாங்குவதற்காக விடிய விடிய காத்திருந்த நோயாளிகளின் உறவினர்கள் மருந்துகள் இன்று முதல் விற்பனை இல்லை என்றும், நாளை முதல் மருத்துவமனை மூலமாகவே மருந்துகள் விற்கப்படும் என மருத்துவ துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தெரிவித்ததால் மருந்து விற்பனை நிலையத்தின் முன்பு நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.இதனை தொடர்ந்து தங்களுக்கு மருந்து வழங்க வேண்டும் என அவர்கள் கல்லூரி வாசலில் முற்றுகையிட முயன்றனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களுக்கு அறிவுரை வழங்கி அங்கிருந்து அவர்கள் அனைவரையும் கலைந்து போக செய்தனர்.இது குறித்துபேசிய மருந்து வாங்க வந்தவர்கள்மருந்து விற்பனை இல்லை என்பதை நேற்று தெரிவித்திருந்தால்தாங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், உறவினர்களை காப்பாற்ற மருந்து கேட்டு காத்திருந்தும் அவசியம் இல்லாமல் போய்விட்டது என்றனர்.அதே நேரம் சிகிச்சைக்கு தேவையான மருந்தை எங்கே வாங்குவோம்? மக்கள் கேள்வி எழுப்பியதுடன், தனது மகனை மற்றும் கணவரை காப்பாற்ற முடியாமல் போய் விடுமோ என்ற துக்கத்தில் மருத்துவமனை வாசலில் பெண்கள் உருண்டு பிரண்டு கதறி அழுதது அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது