திருச்சி மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜனதா கட்சியில் திருச்சி மாநகருக்கு தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி பெருங்கோட்டத்துக்கு பொறுப்பாளராக மாநில துணைத்தலைவர் எம்.முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதுபோல், மாநகராட்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத், பெரம்பலூர் மாவட்ட பிரபாரி இல.கண்ணன் ஆகியோரும், நகராட்சிகளுக்கு மாநில செயலாளர் டி.வரதராஜன், ஓ.பி.சி. அணி மாநில பொதுச்செயலாளர் சரவணன் ஆகியோரும், பேரூராட்சிகளுக்கு ஓ.பி.சி. அணி மாநில பொதுச்செயலாளர் சாய்சுரேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்தீபன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோல் அரசு தொடர்புக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட பிரபாரி தடாபெரியசாமி, ஓ.பி.சி. அணி மாநில செயற்குழு உறுப்பினர் லோகிதாஸ், வக்கீல் பிரிவு மாநில செயலாளர்கள் பன்னீர்செல்வம், ராஜேந்திரகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை பா.ஜனதா கட்சியின் மாநில தலைமை தெரிவித்துள்ளது.