உரிமைக்கோரப்படாத ரூ.50 ஆயிரம்

0 465
Stalin trichy visit

திருச்சி கருமண்டபம் மெயின்ரோட்டில் கடந்த 3-ந் தேதி பகல் 2 மணி அளவில் சாலையில் 500 ரூபாய் நோட்டு கட்டு கிடந்தது. அப்போது அந்த வழியாக சென்ற கருமண்டபம் ஜேபிஎஸ் நகரை சேர்ந்த மதுஷா (வயது 29) என்பவர் அந்த நோட்டு கட்டை எடுத்து கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நோட்டுக்கட்டை எண்ணிப் பார்த்ததில் ரூ.50 ஆயிரம் இருந்தது.

இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் சம்பவ இடத்துக்கு சென்று ரூ.50 ஆயிரத்தை யாரும் தவற விட்டு சென்றார்களா? என அங்கு பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார். மேலும் சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்துக்கு இதுவரை யாரும் உரிமை கோரி வராததால் இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.