உடல்நிலை சரியில்லாததால் மனமுடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

0 281
Stalin trichy visit

திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 57). தொழிலாளியான இவர் சோபா செட் தயாரிக்கும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவருக்கு உடல் ரீதியான பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார்.

மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.