செல்போன் பறித்த 2 பேர் கைது

0 280
Stalin trichy visit

திருச்சி பிச்சாண்டார்கோவில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கார்த்திக்(வயது 29). இவர் பகல் ஜெயில்பேட்டை வெங்காயமண்டி பஸ் ஸ்டாப்பில் இருந்து டவுன் பஸ்சில் ஏறினார். அப்போது 2 பேர் கார்த்திக் மற்றும் அருகே நின்ற மன்சூர் என்பவரிடம் இருந்து செல்போனை பறித்தனர்.

உடனே அவர்களை கையும் களவுமாக பிடித்து காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், பாலக்கரை பீமநகரை சேர்ந்த முகமதுசலீம்(39), தென்னூர் சின்னசாமிநகரை சேர்ந்த சதாம்உசேன்(20) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேர் மீதும் காந்திமார்க்கெட் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.