வேறு ஒருவரை காதலிப்பதாக கூறி திருமணத்தை நிறுத்திய இளம்பெண்; தாய் தற்கொலை முயற்சி

0 523
Stalin trichy visit

திருச்சி கிராப்பட்டி பாரதிமின்நகரை சேர்ந்தவர் தங்கராசு. இவருடைய மனைவி தங்கப்பொண்ணு(வயது 48). இவர்களுக்கு சாந்தி, சந்தியா என்ற இருமகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் சாந்திக்கு திருமண ஏற்பாடு செய்து, திருமணம் நடைபெற இருந்தது.

ஆனால் சாந்தி வேறொருவரை காதலிப்பதாக கூறி கடைசிநேரத்தில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவருடைய தாய் தங்கப்பொண்ணு சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களிலும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய 2-வது மகள் சந்தியா எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் தனது தாய் மாயமாகி விட்டதாக புகார் அளித்தார். இதற்கிடையே
தங்கப்பொண்ணு வீடு திரும்பினார்.

இதையடுத்து மனமுடைந்த நிலையில் இருந்த அவர் எலிமருந்தை சாப்பிட்டுவிட்டு மயங்கி விழுந்தார். அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காவேரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.