தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது; சு.திருநாவுக்கரசர் எம் பி

0 565
Stalin trichy visit

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி ஜங்ஷன் அருகில் உள்ள ரெயில்வே மேம்பால பணிகளுக்கு ராணுவ இடம் கிடைக்காததால் கடந்த 9 ஆண்டுகளாக பணிகள் நிறைவு பெறாமல் இருந்தது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் இப்பிரச்சினை குறித்து வலியுறுத்தினேன்.

இதற்கசாக பாதுகாப்பு துறையின் பல்வேறு நிலையில் உள்ள அதிகாரிகள் பலரையும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரையும் நேரில் தொடர்பு கொண்டு, தொடர்ந்து வலியுறுத்தினேன். அதன்பலனாக ரெயில்வே மேம்பால பணிக்கு தேவையான 0.663 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்து, பணிகளை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் முக்கியமான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.