குண்டும், குழியுமான இடங்களில் தற்காலிகமாக மண்ணை கொட்டி சீரமைத்த போலீசார்

0 471
Stalin trichy visit

திருச்சி மாநகர பகுதிகளில் மழைநேரங்களில் பொதுமக்கள் வாகனங்களில் பாதுகாப்பாக செல்லும் வகையில் மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து மாநகரில் குண்டும், குழியுமாக இருந்த சாலைகள் கண்டறியப்பட்டு, மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து அவற்றை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சத்திரம் பஸ் நிலைய சுற்று பகுதிகளிலும், அண்ணாசிலை ரவுண்டானா, மேலப்புலிவார்டுரோடு உள்ளிட்ட சாலைகளிலும், காந்திமார்க்கெட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வரகனேரிமெயின்ரோட்டிலும், கண்டோன்மெண்ட் போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட அரிஸ்டோரவுண்டானா, ராக்கின்ஸ்ரோடு ஸ்டேட் வங்கி மெயின்ரோடு, தென்னூர் உக்கிரகாளியம்மன் கோவில் முதல் அண்ணாநகர் மற்றும் சாஸ்திரிரோடு வரை குண்டும், குழியுமான இடங்களில் தற்காலிகமாக மண்ணை கொட்டி சீரமைத்தனர்.

மேலும், மழை நேரங்களில் சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து, பாதுகாப்பாக பயணம் செய்ய கமிஷனர் அறிவுறுத்தி உள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.