குடியரசு தினவிழாவையொட்டி வருகிற ஜனவரி (2022) மாதம் 26-ந் தேதி நாடு முழுவதும் “தேசப்பற்றும் தேச நிர்மாணமும்” எனும் தலைப்பில் இளையோருக்கான பேச்சுப்போட்டி மத்திய அரசு மற்றும் நேரு யுவகேந்திரா இணைந்து நடத்துகிறது. அதன் முதல் கட்டமாக ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் திருச்சி மாவட்டத்தில் இந்த மாதம் நடைபெற உள்ளது. போட்டியில் 18 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். தேசிய அளவிலான போட்டிக்கு முதல் மூன்று பரிசுகள் முறையே ரூ.2 லட்சம், ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரம் என வழங்கப்படும். மாநில போட்டிக்கு முறையே ரூ.25 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என வழங்கப்படும்.
மாவட்ட அளவிலான போட்டியில் வென்றவர்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.2,000 ரூ.1,000 என வழங்கப்படும்.மேலும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் தலா ரூ.10,000 ஆறுதல் பரிசாக வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் வருகிற 21-ந் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட இளையோர் அலுவலர், நேரு யுவகேந்திரா, ரேஸ்கோர்ஸ் சாலை, (அரசு சட்டக் கல்லூரி எதிரில்), காஜாமலை, திருச்சி-23 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இ.மெயில் முகவரி: dyc.tiruchirappalli@gmail.com. ஆகும். மேற்கண்ட தகவலை மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் இளைஞர் அலுவலர் எஸ்.ஸ்ருதி தெரிவித்துள்ளார்.