அகில இந்திய தொழிற்தோ்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்

0 608
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் தனித்தேர்வர்களுக்கான அகில இந்திய தொழிற்தேர்வுக்கு, மாநில அளவில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தேர்வு தொடர்பான கல்வித்தகுதி, தேர்வுக்கட்டணம் செலுத்துவது, தேர்விற்கான அறிவுரைகள் தொடர்பான முழு விபரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் அதனை முழுமையாகப் படித்து விண்ணப்பத்தினை கவனமாகப் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சரிவர பூர்த்தி செய்யாத மற்றும் தவறான விபரங்கள் அடங்கிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க வருகிற 22-ந்தேதி கடைசி நாள் ஆகும். மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.