ரேஷன் அரிசி கடத்தும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்; கலெக்டர் எச்சரிக்கை

0 330
Stalin trichy visit

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில், திருச்சி அரியமங்கலம் நாகூர் ஆண்டவர் மாவு அரைக்கும் மில்லில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களால் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையில் பொது கள்ளச் சந்தையில் விற்க தயாராக இருந்த 400 கிலோ குருணை அரிசி மற்றும் குருணையாக அரைக்க தயாராக இருந்த 650 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. இதில் மாவு மில் உரிமையாளர் அல்லாபிச்சை(வயது 45) மீது குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் மூலம் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக கலெக்டர் கூறும்போது, பொது வினியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், இதுபோன்ற குற்ற வழக்கில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.