கடந்த 15 நாளில் 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது; திருச்சி மாநகர காவல் ஆணையர்!
திருச்சி மாநகரத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும் பணம் செல்போன் பறிப்பு பாலியல் வன்முறை கஞ்சா விற்பனை மற்றும் கொலை போன்ற குற்றச் சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் ரோந்து செய்யவும் வாகன தணிக்கை செய்ய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொலை வழக்கில் அரவிந்த் மற்றும் சூரியா ஆகியோர் மீதும், பொன்மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொலை வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளி அலெக்சாண்டர் மற்றும் சரத் என்கிற ரத்தினசாமி ஆகியோர் மீதும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கன்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த கொத்தமங்கலத்தில் சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் மீதும், கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ராஜ்குமார் வீரப்பன் என்பவர் மீதும் எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியாய விலை கடையில் உள்ள அரிசி கடத்திய சுரேஷ் என்பவர் மீதும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் திருச்சி மாநகர நவம்பர் மாதத்தில் கடந்த 15 நாட்களுக்குள் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற குற்றங்கள் செய்த 10 நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.