ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலுக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து புதியவஸ்திரங்கள் வழங்கல்

0 432
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் கைசிக ஏகாதசி திருநாள் அன்று மூலவர் பெருமாள், உற்ச்சவர் ஸ்ரீ நம்பெருமாள், மூலவர் ஸ்ரீ தாயார், உற்ச்சவர் ஸ்ரீரெங்கநாயகித் தாயார்க்கு திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து புதியவஸ்திரங்கள், புதிய குடைகள் கொடுப்பது வழக்கம்.

அதன்படி இவ்வாண்டு இன்று (15.11.2021) கைசிக ஏகாதசியை முன்னிட்டு காலை 7 மணிக்கு திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி ரமேஷ்பாபு புதிய வஸ்திரங்கள், குடைகள் கொண்டு வந்து ஸ்ரீரெங்கவிலாஸ் மண்டபத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க புறப்பட்டு கருடாழ்வார் மண்டபத்தில் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்துவிடம் வழங்கினார்.

உடன் கோயில் உதவி ஆணையர் கு.கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் மா.வேல்முருகன், உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணா மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.