பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் கலந்தாய்வு கூட்டம்!

0 414
Stalin trichy visit

திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில், அமைச்சர் கே.என் நேரு வழிகாட்டுதலின் படி பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள திமுக கழக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு அலுவலகத்தில் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர் வைரமணி தலைமையில் இன்று நடைபெற்றது.

வரவிருக்கும் பேரூராட்சி உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றுவது, வெற்றிக்கான மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, வேட்பாளர்கள் நியமனம் குறித்த இந்த கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பூவாளூர் பேரூராட்சி பகுதி, லால்குடி பேரூராட்சி பகுதி, புள்ளம்பாடி பேரூராட்சி பகுதி மற்றும் கள்ளக்குடி பேரூராட்சி ஆகிய பகுதிகளிலும் திமுக சார்பாக செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.