தாசில்தாருக்கு வந்த மர்ம அழைப்பால் பரபரப்பு

0 578
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், துறையூர் தாலுக்கா அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக தாசில்தாராக பதவி ஏற்றார் ரமேஷ். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு இவருக்கு துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமமான விசுவாம்பாள் சமுத்திரத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் கைது என்று மர்ம நபர் ஒருவர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.

இதை இதையடுத்து தாசில்தார் ரமேஷ் அனைத்து கிராம நிர்வாக அதிகாரியைத் தொடர்பு கொண்டு விசாரணை செய்து உள்ளார். விசாரணை செய்ததில் தனக்கு வந்த தொலைபேசி அழைப்பு பொய்யானது என்று தெரியவந்தது. இதையடுத்து தாசில்தார் துறையூர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புகார் கொடுத்தார் புகாரின்பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.