முந்திரி பருப்பை விழுங்கிய 1½ வயது குழந்தை சாவு

0 316
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த பச்சைமலை அருகே உள்ள எருமைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கலைராஜா. விவசாயியான இவருக்கு நிதர்ஸ்ரக்சன் (வயது 4), மகிழ்ந்தேவ் (1½) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். நேற்று காலையில் குழந்தைகள் இருவரும் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, கீழே கிடந்த முந்திரி பருப்பை மகிழ்ந்தேவ் விழுங்கியதாக தெரிகிறது. இதனால் மூச்சு திணறலால் அவதி அடைந்த அவனை துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவன் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.