தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உருவத்தில் தயாரிக்கப்பட்ட 92 கிலோ கேக்
திருச்சியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கேக் கடையில் பத்து நாட்கள் நடைபெறும் தேர் திருவிழா வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உருவத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள கேக் …
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஸ்வீட் பேக்கரி ஒன்றில் 10 நாட்கள் கேக் திருவிழா நடைபெறுகிறது.
இதில் வலது கையை உயர்த்தியபடி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிற்பது போல் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள கேக் வாடிக்கையாளர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது – சுமார் 6 அடியில் 90 கிலோவில் இந்த கேக்கை பேக்கரி ஊழியர்கள் தயாரித்து உள்ளனர்.
பொதுவாக அரசியல் தலைவர்கள்
கிரிக்கெட் வீரர்கள் போன்றவர்களுக்கு அவர்களது பிறந்தநாளில் இதுபோன்ற
கேக்குகளை தயாரித்து காட்சிப்படுத்துவது வழக்கம் – அந்த வகையில் இந்த கேக்கை உருவாக்கிய கடை உரிமையாளர் தமிழகத்தில் திறம்பட செயல்பட்டு வரும் தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த கேக்கை உருவாக்கியதாக கூறினார்.