அரசு பேருந்தை மறித்து ஓட்டுநரை தாக்கிய 2 பேர் கைது

0 598
Stalin trichy visit

பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள கீழத் தெருவை சேர்ந்த ரெட்டமலை மகன் 62 வயது செந்தில்குமார் இயற்கை எய்தினார். இவரது இறுதி ஊர்வலம் நேற்று பிச்சாண்டார் கோவில் ஊராட்சியில் உள்ள கீழ தெருவில் இருந்து கிளம்பி கொள்ளிடம் ஆற்று கரைக்கு சென்று கொண்டிருந்தது. அதேபோல் திருச்சி புறநகர் கிளை கழகத்திற்கு உட்பட்ட அரசு பேருந்து ஒன்று திருச்சியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி புறப்பட்டது. அரசுப் பேருந்தை திருச்சி கே கே நகர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 59 வயதான கருணாநிதி ஒட்டி வந்துள்ளார். திருச்சி திருவளர்ச்சோலை வடக்கு தெருவை சேர்ந்த 45 வயதான கார்த்திகேயன் நடத்துனராக இருந்துள்ளார். இந்நிலையில் நம்பர் 1 டோல்கேட் ரவுண்டான பகுதியில் இறுதி ஊர்வலம் வந்து கொண்டிருந்தபோது முன்னாள் சில வாலிபர்கள் நடனமாடி சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அரசு பேருந்து ஊர்வலத்தை முந்திச் செல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஊர்வலத்தின் போது சில வாலிபர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அரசுப் பேருந்தை மறித்து வாலிபர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.இதை பேருந்து டிரைவர் கருணாநிதி தட்டிக் கேட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த சில இளைஞர்கள் பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் டிரைவர் கருணாநிதிக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் பட்ட பேருந்து ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் பிச்சாண்டார் கோயில் கீழத் தெருவை சேர்ந்த 28 வயதான விஜயராஜ் மற்றும் 25 வயதான கௌதம் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் விஜயராஜை போலீசார் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.