இருதய நோயால் உயிருக்கு போராடும் குழந்தை: நல்லஉள்ளங்கள் உதவிட கோரிக்கை

0 281
Stalin trichy visit

திருச்சி, டிச.1 இருதய நோயால் உயிருக்கு போராடும் குழந்தையின் உயிரை காப்பாற்றிட நல்உள்ளங்கள் உதவிட வேண்டுமென்று இளம் விதவை தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள நாராயணன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சூசைராஜ்- ஜெபமாலை தம்பதியினர். இவர்களது மகன் அருண்குமார். கார் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி, தீபா (33) என்ற மனைவியும், நிரஞ்சன் (வயது 7), மிதுன் (ஆறு மாதம்) என்று இரண்டு மகன்களும் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட தொழில் முடக்கத்தால் அருண்குமாருக்கு கடன்சுமை ஏற்ப்பட்டது. கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கவே, கடந்த ஜனவரி மாதம் அருண்குமார் தற்கொலை செய்துக் கொண்டார். கணவன் இறந்தபோது, கர்ப்பிணியாக இருந்த தீபாவிற்கு, எட்டரை மாதத்தில் குறை பிரசவத்தில் மிதுன் பிறந்துள்ளான். பிறக்கும்போது அவனுக்கு மூச்சுத்திணறல் இருந்துள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, மிதுன் இருதயத்தில் தமனிகள், சிரைகள் இடம்மாறி, நல்ல ரத்தம் பாயும் பாதையில் கெட்ட ரத்தமும், கெட்ட ரத்தம் பாயும் பாதையில் நல்ல ரத்தமும் பாய்ந்து வருகிறது. மேலும், ஓரிடத்தில் ரத்தக்குழாய் சுருக்கியும், இருதயத்தில் 3 இடங்களில் ஓட்டைகள் இருப்பதையும் கண்டறிந்து உள்ளனர். தற்போது, 6 மாதமாகும் மிதுனுக்கு, கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், ஒரு வாரக் காலத்திற்குள் அறுவை சிசிச்சை செய்ய வேண்டும்’ என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மாமியார் ஜெபமாலை வாங்கும் ஓய்வூதியத் தொகையை கொண்டே தீபா தனது இரண்டு குழந்தைகளுடன் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்.
இந்நிலையில், வருமானமின்றி சிக்கித் தவிக்கும் இளம் விதவைப் பெண்ணிற்கு 8 லட்ச ரூபாய் என்பது இவருக்கு எட்டாத உயரம் என்பதால், பச்சிளம் குழந்தையான தனது மகனை காப்பாற்ற பல்வேறு தரப்பினரிடம் நிதியுதவி கேட்டு போராடி வருகிறார். இந்நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் ஏற்படும் செலவுத் தொகை முழுவதும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். எனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக, பி.காம்., படித்துள்ள தனக்கு ஒரு அரசு வேலை வழங்க வேண்டும்” என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுக்கின்றார். தனது மகனை காப்பாற்ற நல்ல உள்ளம் படைத்தவர்கள் நிதியுதவி அளித்து உதவ வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.