சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.85 லட்சம் காணிக்கை வசூல்

0 285
Stalin trichy visit

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களிலும், பாதயாத்திரையாகவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அப்படி வரும் பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியல்கள் மூலம் தங்கள் காணிக்கைகளை செலுத்துவார்கள். பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை கோவில் நிர்வாகம் சார்பாக மாதம் இருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மாதம் இரண்டாவது முறையாக நேற்று கோவில் இணை ஆணையர் கல்யாணி, மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அதிகாரிகள் முன்னிலையில் 37 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில், காணிக்கையாக 85 லட்சத்து 49 ஆயிரத்து 57 ரூபாய் ரொக்கமும், 2கிலோ 287 கிராம் தங்கமும், 3 கிலோ 691 கிராம் வெள்ளியும், அயல்நாட்டு பணம் 276-ம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.