சமூக ஆர்வலர் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
கரூர் சமூக ஆர்வலர் ஜெகநாதன் அவர்களின் படுகொலையை கண்டித்து இன்றைய தினம் கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் வருகின்ற 26. 9.. அன்று காலை 10:30 மணி அளவில் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஜெகநாதன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது மற்றும் ஜெகநாதன் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெறும் கனிம சுரங்கங்களை உடனடியாக தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இதுபோன்ற படுகொலை இனி தமிழகத்தில் நடக்கும் பட்சத்தில் அவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ஒரு கோடியும் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் ரூபாய் 50 லட்சமும் ஆக 1.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் சமூக ஆர்வலர்களின் நலன் கருதி அனைத்து சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு அமைக்கப்படும்….
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ..
சமூக செயற்பாட்டாளர் சங்கர், தக்க சண்முகசுந்தரம், தமிழ் களம் இளவரசன், கீழப்பழுவூர் கார்த்திகேயன், கல்லக்குடி பழனிவேல், வழக்கறிஞர் மாரிமுத்து, வழக்கறிஞர் அருள் ராஜா, வெண்மணி வரதராஜன்,வெற்றி ஒரு சுயம் பிரகாசம் மற்றும் பொன்னுசாமி கலையரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்