துறையூர் அருகே விவசாயி குத்திக் கொலை

0 302
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 29  திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள நரசிங்கபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சரவணன் இவருக்கும் பக்கத்து வீட்டுகாரர் செல்வராஜுக்கும் வீட்டின் கூரைவாரி சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்த நிலையில் இன்று சரவணனுக்கும் செல்வராஜுக்கும் மீண்டும் தகராறு நடந்துள்ளது இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் சரவணனை குத்துவாளால் சரமாரியாக குத்தியதில் படுகாயம் அடைந்க சரவணன் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்

முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் மற்றும் துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணத்தை விசாரணை செய்து வருகின்றனர்
தலைமறைவான குற்றவாளி செல்வராஜை தேடி வருகின்றனர்

இச் சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.