மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ ராட்சத கொழுக்கட்டை படையல்

0 269
Stalin trichy visit

திருச்சி ஆக 27 – விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் உள்ள உச்சி பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை, மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ கொழுக்கட்டை என மொத்தம் 150 கிலோ கொழுக்கட்டை படையலிடப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி மலைக்கோட்டையின் நடுவே தென் கயிலாயம் என்று போற்றப்படும் தாயுமான சுவாமி கோவிலும், மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதியும், மலையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சன்னதியும் உள்ளன.
இந்தக் கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று தொடங்கி செப்.10 ந் தேதி வரை நடைபெற உள்ளது.

சிறப்பு பூஜை

அதன்படி இன்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி காலை 7 மணியளவில் மலைக்கோட்டை கோவில் யானை லட்சுமிக்கு கஜபூஜை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்துகாலை 6:30 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது.இதைத் தொடர்ந்து ஏழு மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு சிறப்பு பூஜையும், சந்தன காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. பின்னர் பிரம்மாண்ட கொழுக்கட்டையும் நைவேத்தியம் செய்யப்பட்டது.

150 கி ராட்சத கொழுக்கட்டை படையல்

இந்த விழாவிற்காக கோவில் மடப்பள்ளியில் 6 கிலோ வரையிலான தேங்காய்ப்பூ, 60 கிலோ பச்சரிசி மாவு, 60 கிலோ அளவிலான உருண்டை வெல்லம், 4 கிலோ ஏலக்காய், ஜாதிக்காய், எள் மற்றும் 30 கிலோ நெய் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி 24 மணி நேரத்திற்கு முன்பு சுடுநீர் ஆவியில் வேகவைத்து 150 கிலோவில் பிரம்மாண்ட கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டது.
பிறகு இந்த கொழுக்கட்டையை இன்று காலை கோவில் பணியாளர்கள் ஒரு துணியில் தொட்டில் போல கட்டி மடப்பள்ளியில் இருந்து தூக்கிக்கொண்டு சென்றனர். இதில் உச்சிப்பிள்ளையாருக்கும், பின்னர் மாணிக்க விநாயகருக்கும் தலா 75 கிலோ அளவிலான கொழுக்கட்டையை படையலிட்டனர்.
பிறகு மாணிக்க விநாயகருக்கு உச்சி பிள்ளையாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.பிறகு படையலிட்டு நைவேத்தியம் செய்யப்பட்டது இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு
விநாயகரை தரிசிக்க நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். படையல் செய்யப்பட்ட கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மலை உச்சியில் உள்ள படிகளில் பல்வேறு வகையான வண்ணங்களில் கோலங்கள் போடப்பட்டிருந்தன. மாணிக்க விநாயகர் சன்னதியிலும், உச்சிப்பிள்ளையார் சன்னதியிலும் பழ வகைகள், மலர்களால் ஆன பந்தல் மற்றும் வாழை மரங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

விழாவில் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மலைக்கோட்டை கோவிலில் இன்று முதல் 14 நாட்கள்
தொடர்ந்து பால கணபதி, நாகாபரண கணபதி, லட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜ அலங்காரம், மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாருடர், சித்திபுத்தி கணபதி, நடன கணபதி ஆகிய அலங்காரங்களில் உச்சிப்பிள்ளையார் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
இதையடுத்துவிநாயகர்க்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். இதே போன்று திருச்சி மாநகரில் பாலக்கரை செல்வ விநாயகர் கோயில், ரெட்டை பிள்ளையார் கோவில்,கேகே நகர் விநாயகர் கோவில் உள்ளிட்டதிருச்சியில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.