சுடுகாட்டில் பிணமாக கிடந்த கூலி தொழிலாளி

0 180
Stalin trichy visit

திருச்சி செப்.24- திருச்சி சங்கிலியாண்டபுரம் பாரதி நகர் முதலாவது தெருவை சேர்ந்தவர் ஜமால் முகமது .இவரது மகன் ராஜ் முகம்மது (வயது 31). இவருக்கு திருமணம் ஆகி ரஹ்மத்நிஷா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் காந்தி மார்க்கெட்டில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இந்நிலையில் ராஜ் முகம்மது திருச்சி மணல் வாரித் துறை ரோடு சுடுகாட்டு மைதானத்தில் மயங்கி விழுந்து பிணமாக கிடந்தார். அக்கம் பக்கத்தினர் பார்த்து பாலக்கரை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து அங்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் தலைமையிலான போலீசார் ராஜ் முஹம்மதுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.