கஞ்சா விற்பனை செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது

0 308
Stalin trichy visit

மனித உடலுக்கும் உயிருக்கும் கேடு விளைவிக்கும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் கஞ்சா போதை பொருளை விற்பனை செய்த நபர் குண்டர் தடுப்பு (மருந்து சரக்கு குற்றவாளி) காவல் சட்டத்தில் கைது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன்,திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், இளஞ்சிறார்களை சீராழிக்கும் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர் மற்றும் விற்பனைக்காக பதிக்கி வைத்திருப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

கடந்த 17.11.22-ந்தேதி சத்திரம் பேருந்து நிலையம், ராஜேஸ்வரி பேக்கரி அருகில், மனித உடலுக்கும் உயிருக்கும் கேடு விளைவிக்கும், அரசால் தடைசெய்யப்பட்ட இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் கஞ்சா போதை பொருளை இருசக்கர வாகனத்தில் வைத்து விற்பனை செய்த உறையூர் பங்காளி தெருவை சேர்ந்த அபுதாகீர் வயது 26 த.பெ.ஷாகீர்உசேன் என்பவரை பிடித்து அவரிடமிருந்து சுமார் 2 கிலோ (மதிப்பு ரூ.20,000/-) கஞ்சாவை கைப்பற்றி, திருச்சி மாநகர மதுவிலக்குபிரிவில் வழக்குப்பதிவு செய்து, எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும் விசாரணையில் எதிரி அபுதாகீர் மீது அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்ததாக 4 வழக்குகளும், ஒரு அடிதடி வழக்கு உட்பட 6 வழக்குள் பல்வேறு காவல் நிலைங்களில் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

எனவே, மேற்படி எதிரி அபுதாகீர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் கஞ்சா போதை பொருளை தொடர்ந்து விற்பனை செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என விசாரணையில் தெரிய வருவதாலும், எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு திருச்சி மாநகர மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் மேற்படி நபரை குண்டர் தடுப்பு (மருந்து சரக்கு குற்றவாளி) சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மேற்படி எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.