வையம்பட்டியில் வளர்ச்சித் திட்டப்பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, டிச. 13 திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழையகோட்டை ஊராட்சி, இனாம் ரெட்டியப்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 9.65 இலட்சம் மதிப்பீட்டில் வண்ணாகுட்டையில் சிறுகுளம், படித்துறை நீர்வரத்துப்பகுதி மற்றும் நீர் வெளியேற்றும் பகுதிகளில் கட்டுமானப் பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 10.19 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டடம் கட்டும் பணியினையும், ஒந்தாம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 1865 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை பள்ளிக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகளையும், தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூபாய் 42.52 இலட்சம் மதிப்பீட்டில் பழையகோட்டை ஊராட்சி ஓந்தாம்பட்டி முதல் முகவனூர் சாலை பலப்படுத்துதல் பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 4.9 இலட்சம் மதிப்பீட்டில் ஓந்தாம்பட்டி மேல்நிலைப்பள்ளியில் மிதிவண்டி கூடம் அமைக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, வையம்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 41.03 இலட்சம் மதிப்பீட்டில் வாரசந்தை கூடம் கட்டுமானப் பணிகளையம், ரூபாய் 10.19 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டுமானப் பணிகளையும், நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணிகளையும், குமாரவாடி ஊராட்சி தொப்பநாயக்கன்பட்டியில் ரூபாய் 9.60 இலட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் பணிகளையும், வையம்பட்டியில், ஒருங்கிணைந்த வரையறுக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூபாய் 3.95 கோடி மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், தரமானகவும் முடித்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, மணப்பாறை அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியின் அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்தும், வடுகப்பட்டி நியாயவிலைக் கடையில் பொது மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், பொதுமக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வுகளில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் உள்ளிட்ட வளர்ச்சித்துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.