திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணியிடம் நகைப்பறிக்க முயன்றவர் கைது

0 306
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 23 திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணியிடம் நகைப்பறிக்க முயன்றவரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் அயனாபுரத்தை சேர்ந்தவர் மருது பாண்டியன் (33) இவர் தனது நண்பர் திருப்பதியுடன் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தில்லைநகர் செல்ல பேருந்து நிறுத்தத்தில் பஸ்சில் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார் அப்போது திடீரென்று மருது பாண்டியனின் அருகில் மர்ம ஆசாமி ஒருவர் வந்து அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ஒரு பவுன் நகை மற்றும் பணத்தை திருடி கொண்டு அங்கிருந்து ஓட முயன்றார்.

இதைப் பார்த்த அருகில் உள்ள பொதுமக்கள் நகை திருடிய மர்ம ஆசாமியை பிடித்து கண்டோன்மென்ட் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அரியலூர் மாவட்டம் உடையார்பாலத்தை சேர்ந்தவர் வீரமணி (43) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.