வயதான தம்பதியினரை கத்தியால் குத்தி நகை கொள்ளை : திருடனை பிடித்து தாக்கிய பொதுமக்கள்

0 114
Stalin trichy visit

திருச்சி, பிப்.5 பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைந்து கத்தியால் குத்தி கொடூர தாக்குதல் நடத்திய திருடன் பொதுமக்கள் கட்டி வைத்து செம கவனிப்பு

திருச்சி வயலூர் ரோடு வாசன் வேலி குடியிருப்பு பகுதி 25வது கிராஸ் வயதான தம்பதியினர் வீட்டில் இருந்துள்ளனர் அந்த பகுதி முழுவதும் தனித்தனி வீடுகளாக இருக்கும் வேலைக்கு செல்லும் மகன் மகள் உள்ளிட்டோர் சென்றுவிடும் நிலையில் பட்டப்பகலில் முதியவர்கள் மட்டும் அங்கே இருப்பார்கள் என்பதை நோட்டமிட்டு திருடன் ஒருவன் வீட்டிற்குள் புகுந்துள்ளான்

வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியினர கட்டிவைத்து பட்டபகலில் கத்தியால் குத்தி உடல் முழுவதும் ரத்தம் வழிந்த நிலையில் அவரின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. திருடன்
அதையும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து வீட்டில் கொள்ளை அடிக்கவும் அவர்களை துன்புறுத்தி நகை பணங்களை கேட்டும் தாக்கியுள்ளான். அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் அந்த வீட்டிற்குள் சென்று திருடனை பிடித்து கட்டி வைத்து செம கவனிப்பு கவனித்தனர்.

இதுகுறித்து சோமரசம்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு வந்த சோமரசம்பேட்டை காவல்துறையிடம் திருடனை ஒப்படைத்தனர்.

இந்த சம்பவத்தால் ரத்த வெள்ளத்தில் இருந்த முதியவர்களை மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காவல்துறையினர் அந்தத் திருடனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.