மாற்றுக் கட்சியை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்

0 12
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 10  மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்  முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். .

திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில், தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து (அஇஅதிமுக) விலகி, 17-வது வார்டைச் சேர்ந்த சிங்கமுத்து என்பவர் தன்னை திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) இணைத்துக் கொண்டார். இவர் அஇஅதிமுகவில் வட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் போது, திருச்சி மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன், பகுதிக் கழகச் செயலாளர் பாபு, வட்டக் கழகச் செயலாளர் மனோகர் மாநகர அயலக அணி அமைப்பாளர் இப்ராஹீம் ஷா ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.