தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற திருச்சி மாணவருக்கு உற்சாக வரவேற்பு

0 117
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 10  தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற திருச்சி மாணவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தேசிய அளவிலான கராத்தே போட்டி கடந்த 3ம் தேதி தொடங்கி 7ம் தேதிவரை நடைபெற்றது, தமிழகம் உள்ளிட்ட 30 மாநிலங்களில் இருந்து வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதில், திருவெறும்பூர் மான்போர்ட் பள்ளியில் 7ம் வகுப்பு பயின்று வரும் ஜெரின் என்ற மாணவர் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெண்கல பதக்கம் வென்று திருச்சிக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பதக்கம் வென்ற மாணவன் ஜெரின் மற்றும் கராத்தே பயிற்சியாளர் சுதாகர் ஆகிய இருவருக்கும் திருச்சி விமானநிலையத்தில் பெற்றோர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது, அடுத்து வரும் போட்டிகள் நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வேன் என்று மாணவர் ஜெரின் தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.