செந்தண்ணீர்புரம் பகுதியில் புதிய பேருந்து நிறுத்தம் – அமைச்சர் அன்பில்மகேஸ் திறந்து வைத்தார்
திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது தொகுதிக்கு உட்பட்ட செந்தண்ணீர்ப்புரம் பகுதி மக்களின் கோரிக்கையை தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிறுத்தத்தினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் துணை மேயர் திருமதி.திவ்யா, மண்டல தலைவர் மு.மதிவாணன், பகுதி செயலாளர்கள் இ.எம்.தர்மராஜ், TPSS.ராஜ்முகமது, மோகன், G.மணிவேல், வட்ட செயலாளர் ரெங்கநாதன் மாமன்ற உறுப்பினர்களும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
