நீரழிவு நோயினால் அவதிப்பட்டவர் விஷம் குடித்து தற்கொலை

0 215
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செங்கரையூரில்  நீரழிவு நோயினால் அவதிப்பட்டு வந்தவர் மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செங்கரையூர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்  மனோகரன் (56) . இவர் கடந்த நான்கு வருடமாக நீரழிவு நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார் இதற்காக மருத்துவ சிகிச்சையும் எடுத்துக் கொண்டிருந்தார். மேலும் அவரது கால்விரலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்ட மனோகரன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் .இதனைத் தொடர்ந்து கடந்த 28 ம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர்ச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.